கொடுப்பதுதான் வாழ்க்கை
இயற்கை கொடுத்துக்கொண்டே இருக்கிறது
கண் இருந்தால் கடினம் ஆகும்
அவை முகம் பார்த்துக் கொடுப்பதில்லை
எவர் பறித்துக் கொண்டாலும் பதற்றமில்லை
பழிவாங்கத் துடிப்பதும் இல்லை
அணு ஆயுத அறிவும் இல்லை
வங்கிக் கணக்கில் சேர்ப்பதும் இல்லை
வட்டிக் கணக்குப் போட்டதும் இல்லை
தன் தலைமுறைக்குத் தன்னைத் தரும்
வார்த்தை இன்றிக் கற்றுத் தரும்
ஆறறிவு எனச் சொல்லிக் கொள்ளும்
மனிதன் மட்டும் விதிவிலக்கு
அத்தனையும் தனது என்றதனால்
தேடுது இங்கு மதுவிலக்கு...
எடுத்தது எல்லாம் திரும்பக் கொடு
சும்மா இருக்கப் பாடுபடு
இதற்கு நல்ல உபயம் அன்று
மகாகவி பாரதி வரிகள் உண்டு
ஆதலினால் காதல் செய்வீர்
காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்...
இயற்கை கொடுத்துக்கொண்டே இருக்கிறது
கண் இருந்தால் கடினம் ஆகும்
அவை முகம் பார்த்துக் கொடுப்பதில்லை
எவர் பறித்துக் கொண்டாலும் பதற்றமில்லை
பழிவாங்கத் துடிப்பதும் இல்லை
அணு ஆயுத அறிவும் இல்லை
வங்கிக் கணக்கில் சேர்ப்பதும் இல்லை
வட்டிக் கணக்குப் போட்டதும் இல்லை
தன் தலைமுறைக்குத் தன்னைத் தரும்
வார்த்தை இன்றிக் கற்றுத் தரும்
ஆறறிவு எனச் சொல்லிக் கொள்ளும்
மனிதன் மட்டும் விதிவிலக்கு
அத்தனையும் தனது என்றதனால்
தேடுது இங்கு மதுவிலக்கு...
எடுத்தது எல்லாம் திரும்பக் கொடு
சும்மா இருக்கப் பாடுபடு
இதற்கு நல்ல உபயம் அன்று
மகாகவி பாரதி வரிகள் உண்டு
ஆதலினால் காதல் செய்வீர்
காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக