ஒத்த ரூபாயில்
இரண்டு பிஸ்கட்
தெரு நாய்கள் நட்பு
இல்லாத பலராலும்
நிறைந்ததுதான் சமூகம்
கீழே சிதறும்
சோற்றுப் பருக்கையும்
எறும்பிடம் சேர்க்காத சமூகம்
முதியோர்க்கு
இருக்கை தராது
புதியோர்க்கு
புன்னகைப் பூக்காது
சிறுவர்க்கு
சிறகுகள் அளிக்காது
திருநங்கையை
உடன் சேர்க்காது
இல்லாதவர்க்கு
இயன்றதை ஈயாது
பொல்லாதவர்க்கு
தண்டனை கிடையாது
விவசாயிக்கு
விருதுகள் வழங்காது
கட்டணமின்றி
கல்வி கிடைக்காது
காந்தி கண்ட கனவெல்லாம்
அழித்துவிட்டது கை
கோடிகளுக்கும் கேடிகளுக்கும்
மலர்ந்து நிற்கும் தாமரை
தன்னைத் தற்காத்துக் கொள்ள
உருவாக்குது ராமரை...
பணம் உள்ளவர்க்கே
பரந்த இவ்வுலகம்
நீதிக்கு கண்மூடி
விளையாடும் சமூகம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக