வியாழன், 13 ஆகஸ்ட், 2020

 


கல்லும் மண்ணும்
நீரும் நெருப்பும்
காற்றும் வெளியும்
கலந்த உலகில்
நானும் கலவை

நல்லது தீயது
உயர்ந்தது தாழ்ந்தது
வலிந்தது நலிந்தது
ஏனிந்தக் கவலை

எல்லாம் கலவை
பிரபஞ்சத்தின் பிளவை
அதன் ஆட்டத்தில் கலந்திரு
மற்றதை மறந்திடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக