புதன், 20 மே, 2020

கொஞ்சம் உரிமை எடுத்துக் கொள்ளட்டுமா...
உன் மீது
என்று கேட்காகாமலே
நீ கேட்டுக் கொண்டிருப்பதாய்
நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உனக்கும் எனக்கும் இடையிலே
இடைவெளி மறுத்து
இந்த இடைவெளியை ஏற்றுக் கொண்டேன்
எல்லா இன்பங்களும்
இல்லாமல் போனாலும்
நான் விரும்பாத ஒன்று
நடக்காமல் இந்த
நாடகத்தை நடத்துகிறேன்...

கொஞ்சம் உரிமை எடுத்துக் கொள்ளட்டுமா...
மீண்டும் மீண்டும் விழுங்குகிறேன்
தொண்டைக் குழியில் பதுக்குகிறேன்
மாயவித்தை தெரிந்தவளே
உண்மையில் நீ நடத்தும்
நாடகம் தான் என்ன...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக