இறுதிவரை
நாங்கள் பார்த்தவரை
தன் பேச்சை மட்டுமே கேட்டு வாழ்ந்தவன்
வாழப் பிறந்தவன்
இன்பங்களை எல்லாம் ஆளப் பிறந்தவன்
அள்ளி அள்ளிப் பருகியவன்
நான்கு தலைமுறைகள் பழகியவன்
நண்பர்கள் பல பெருகியவன்
எங்களுக்கு எல்லாம் அண்ணன்
எங்கள் தந்தையர்களுக்கு அவன் தம்பி
குடிதான் அவனுக்கு இறைவன்
உள்ளே நுழைந்து விட்டால்
விடிய விடிய சாமி ஆடுவான்
கட்டுமஸ்தான உடம்புக்காரன்
இரு மார்புகள் மட்டும் அசைத்தாட்டி
சந்தோஷப் பரிசளிக்கும் ஆட்டக்காரன்
வயதுகள் மட்டும் தான் வித்தியாசம்
வந்தவர்களுக்கு எல்லாம் சம நேசம்
சமர் கூடச் செய்திடுவான்
சட்டெனவே மறந்திடுவான்
தவறென்று சொன்னாலும்
தனக்கு சரி என்றால் செய்திடுவான்
தன்னையே கொடுத்து விட்டான்
தன் அறம் காத்து விட்டான்
சந்தோஷமாக வாழ விரும்பும்
யாரைத்தான் காலன் விட்டு வைத்தான்
தன்னுடன் அழைத்துக் கொண்டான்
இனி மேல் உலகம் கொண்டாட்டம் தான்...
அங்கேயும் தமிழ் அரசன் தான்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக