புதன், 1 ஜூலை, 2020



யாரும் இல்லாத பாதையிலே
நானும் இல்லையே
பாதையோடு பேசத் துடிக்கும் பாதங்கள்...

பாதை பதில் ஏதும் பேசுவதில்லை
தலை கூட ஆட்டுவதில்லை
சொல்வதை எல்லாம் பதிந்து கொள்கிறது

விட்டு வந்த சொற்ச் சுவடுகளுடன்
நீ பேசுகிறாயா தெரியவில்லை
ஒட்டி வந்த துகள்களுடன்
நான் பேசுகிறேன்
அதுவும் எதுவும் பேசவில்லை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக