திங்கள், 26 மே, 2025


அமாவாசை 

நிலவுக்குத் தான்

நீ எப்போதும் போல எழுது

கரும்பலகையில் எதையாவது... 


தெரியவில்லை எனினும்

எதையாவது புரிந்து கொள்ளும்

இந்தக் கிறுக்கு இதயம்


எப்போதும் போல

ஒரு பறக்கும் முத்தம் தந்து

அது பறந்து போவதைப் 

பார்த்துக் கொண்டிருக்கும்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக