புதன், 4 டிசம்பர், 2024


மூச்சைக் கொடுத்து

மூச்சை வாங்குகிறேன்

போற்றி! போற்றி! 


இருக்கும் வரை

என் மூச்சிலேயே வாழ்வேன்

வெற்றி! வெற்றி! 


இதயத்திலிருந்து வணங்குகிறேன்

மரஞ்செடிகளே மண்ணே

மழைமேகங்களே கடலே

விண்மீன்களே வானே

காற்றே இயற்கையே கனவே

நன்றி! நன்றி! 


எந்த மூச்சுக்கு அடித்தாலென்ன

மரண லாட்டரி... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக