தாம்பரம் நேஷனல் தியேட்டரில் நேற்று மாலை 6.30 காட்சி பார்த்தேன். மொத்தமாகவே 50க்கும் குறைவான பார்வையாளர்கள் தான் இருந்தார்கள். இரண்டாம் விடுதலையும் நமக்கு வீணாகித்தான் போனது. வெற்றிமாறன் மற்றும் குழுவினர்களின் மொத்த உழைப்பும் இப்படி பார்ப்பாரின்றி இருக்கிறதே?
"உலகத் தொழிலாளர்களே ஒன்றிணையுங்கள் " என்றார் கார்ல் மார்க்ஸ்
குறைந்தபட்சம் தமிழகத் தொழிலாளிர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மொத்தமும் ஒன்றிணைந்து பார்த்துப் படிக்க வேண்டிய பாடம் விடுதலை 2.
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் இவர்களுக்கெல்லாம் கிடைக்காத அரிய கதாப்பாத்திரம் விஜய் சேதுபதி அவர்களுக்கு கிடைத்தது அவரின் பாக்கியம். படம் முடிந்தும் பாடம் எடுக்கிறார் வாத்தியார்.
இளையராஜாவின் எத்தனையோ இசை மனதைத் தொட்டிருக்கும், எத்தனையோ இசை இதயத்தைத் தொட்டிருக்கும், கம்யூனிஸ சித்தாந்தத்தில் உன் ஸ்ருதி சேரும் போது உயிரைத் தொட்டுவிட்டது ஐயா. இது பல கோடி ஆஸ்காருக்கும் மேலானது.
மகாலட்சுமியின்(மஞ்சு வாரியார்) கடைசி வசனங்கள் அனைவரையும் உட்கார வைத்துக் கேள்வி கேட்டு, கூனிக் குறுக வைக்கிறது.
பார்வையாளர்களின் மனசாட்சி தான் குமரேசன்(சூரி) . படத்தின் முடிவில் சுயநலங்களில் இருந்து மேலெழுந்து ஒருகணம் பொதுநலம் யோசித்து சற்றே தனித்துச் செல்கிறது மனசாட்சி.
ஆம் இதற்கு படம் பார்த்த நானும் ஒரு சாட்சி.
மொத்தப் படக் குழுவினருக்கும் வாழ்த்துகள். படத்தை பார்க்க வேண்டும் என தமிழகத் தொழிலாளிகளுக்குக் கோரிக்கைகள்.
"கடைசி விவசாயி"யைத்தான் விட்டுவிட்டோம்.
இந்த "விடுதலை 2" போராளிக்காவது தோள் கொடுப்போம் தோழர்களே...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக