நேற்றைய இரவில்
நான் அந்த நிலவில்
இதயத்தைத் தவறவிட்டேன்
நேற்றைய இரவு
நேற்றைய நிலவு
நேற்றைய இதயம்
இனி நினைவில் மட்டும்தான்
இன்றைய இரவு
இன்றைய நிலவு
இன்றைய இதயம்
இன்னும் கொஞ்சம் நேரம்
நாளை புதிதாக இருக்கும்
இரவும் நிலவும் இதயமும்
நானும் கூட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக