ஞாயிறு, 31 ஜூலை, 2022


எத்தனை நீளமானது
அதன் நகங்கள்
எத்தனை கூர்மையானது
அதன் பற்கள்
எத்தனை வெம்மையானது
அது கக்கும் நெருப்பு

நீயோ அதனை
எத்தனை அழகானது
என்கிறாய்

என்னைப் போலவே தான்
நீயும் இருக்கிறாய்

அதன் கண்களில்
கனிவு
மெல்ல மெல்ல மாறுவதை...

பதுங்கி
பின் பாயப் போகும்
இறக்கமில்லா
அந்த டிராகனை
ஒரு கணத்தில்
நீயும் அறிவாய்...

உன் இரத்தம்
குடித்திருக்கும்
உனை உயிரோடும்
விட்டுவைக்கும்...

உன்
உயிரின் போராட்டம்
பிடித்திருக்கும்...
தூண்டிலில் இருந்து
விடுவிக்கும்
மீண்டும் மீண்டும்
தூண்டிலில் சிக்க வைக்கும்
நீ துடிதுடிக்கும்
அந்த தருணத்திற்காக
சாத்தானிடம்
மண்டியிட்டு வேண்டும்

அந்த கண்களுக்குள்
மூழ்கித் தவமிருக்கும்
இறக்கமில்லா
அந்த டிராகனை
ஒரு கணத்தில்
நீயும் அறிவாய்...

அதுவரை
சொல்லிக் கொண்டுதான் இருப்பாய்
அது எத்தனை அழகானதென்று...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக