வியாழன், 7 ஜூலை, 2022

 


மலை மௌனமாக இருக்கிறது
மௌனம் தான் மலையாக இருக்கிறது
நானும் மலையில் இப்போது

நானா... மலையா... மௌனமா...
பிரிவேதும் இல்லை
பிரிந்து நகர்ந்து வரும்வரை

பிரிந்து நகரும் போதெல்லாம்
நான் மலை இல்லை
என்னில் மௌனமும் இல்லை

மலையாக இருந்த பாறை
பிரிந்து உருண்டோடும் போது
அதுவும் மலை இல்லை

பிரியாத நகராத யாவும் மலை
உன்னில் நானும்
என்னில் நீயும்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக