சனி, 9 ஜூலை, 2022

 


குயில் கூவிக்கூவி
என் நெஞ்சில் வரைகிறது
உன்னை...

குயில் பாடல் உளி ஆனது
உன் உருவம்
என் நெஞ்சில் சிலையாகுது...

கூடு இல்லாத குயில்
நாடோடி
உனைத் தேடி அலைகிறது
என் ஆவி...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக