புதன், 9 பிப்ரவரி, 2022

 


விறகுக் கட்டைகளாக
வெட்டி அடுக்கப்படுகிறது
ஓவியத்திலிருந்து கோடுகள்

தேம்பித் தேம்பி எரிகிறது
கண்ணீரிலான கோடுகள்
வெடித்து வெடித்து எரிகிறது
சிரிப்பிலான கோடுகள்

பிடி சாம்பலில்
ஒரு ஓவியம்
ஒளிந்திருக்கிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக