செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

 


உருவம் அற்றதை
உருவம் உருகி வேண்டி
உருவம் அற்றதாய் மாறும்
உருவமும் அருவமும்
ஆன்மீக விளையாட்டு

உருவத்தை உருவம்
உருகி வேண்டி
உருவம் அற்றதாய் மாறும்
உருவமும் அருவமும்
ஆண்பெண் விளையாட்டு

கண் திறந்தால் உருவம்
கண் மூடினால் அருவம்
உருகி வேண்டி உறவாடு
உருவமும் அருவமும்
பிரபஞ்ச விளையாட்டு
விளையாடு...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக