வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

 


உன்னைப் பார்த்தே இருக்கக்கூடாது
ஒரு கண்ணை மூடினேன்
மறு கண்ணில் பார்த்துவிட்டேன்

தூசு விழுந்தது போல் நடித்தேன்
நீ ஊதினாய்
நான் பறந்தேன்
தூசாக...

என்னை காலி செய்து
உன்னை நிரப்பி விட்டாய்
உயர உயரப் போகிறேன்
லேசாக லேசாக
ஆகிறேன் லூசாக...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக