சனி, 28 மார்ச், 2020

வானம் எப்படியோ
நானும் அப்படியே

தனித்திருந்து பார்க்கிறேன்
உன்னை மட்டும்

விரல்களுக்கு
எட்டும் தூரம்தான்
இருந்தும்
கைகள் கோர்க்க மறுக்கிறாய்

விடாமல் தொடர்கிறேன்
விலகி விலகியே நடக்கிறாய்
பிடிக்காதது போல் நடிக்கிறாய்

உனை நாடி
வந்த எனக்கு
உன் நாடி தெரியாதா...

வானம் விலகாது
விரல்களும் கண்களும்
அகலாது

பகலேது இரவேது
நான் எப்போதும்
உன்னோடு...

வானம் தொடு
எனை உணர்வாய்
நான்
உனை உணர்வது போல...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக