வியாழன், 3 ஜூன், 2021

 


நகை பணம்
வீடு நிலம்
எல்லாமே கடவுள் மறுப்பு

வானம் பூமி
காற்று மழை
எல்லாமே கடவுள் பரிசு

இலாபம் நட்டம்
முதலாளி தொழிலாளி
எல்லாமே கடவுள் எதிர்ப்பு

பூவும் தேனும்
காயும் கனியும்
எல்லாமே கடவுள் பரிசு

போரும் பகையும்
எல்லையும் எதிரியும்
எல்லாமே கடவுள் எதிர்ப்பு

பாசமும் நேசமும்
காதலும் நட்பும்
எல்லாமே கடவுள் பரிசு

மறுப்பும் எதிர்ப்பும்
கொண்டு மக்கள்
பரிசைப் பகிர்ந்திட
ஏன் மறந்தார்?

ஆலயங்கள் கட்டிவைத்து
ஆண்டவனைக் கட்டிவைத்தார்
மதங்கள் பற்பல வளர்த்து விட்டு
மனங்களைக் கற்போல் ஆக்கிவிட்டார்...

கடவுளின் பரிசுகளை விட்டுவிட்டு
கடவுளுக்கு அர்ச்சனைகள் தூவுகிறார்
எல்லாமே கடவுள் மறுப்பு
எல்லாமே கடவுள் எதிர்ப்பு...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக