என்னுடைய கோப்பையும்
உன்னுடைய கோப்பையும்
வழக்கம் போல் போட்டி போடும்
கட்டிங் குவாட்டராகும்
குவாட்டர் ஆஃப்பாகும்
ஆஃப் ஃபுல்லாகும்
நீயா நானா போட்டிதான்
அளவிலும் அந்தஸ்த்திலும்
இந்த மயக்கத்தில் தான்
நிதம் நீயும் நானும்
சாராயம் ஆனாலும்
சமூகம் ஆனாலும்
வெற்றி ஆனாலும்
தோல்வி ஆனாலும்
இந்த மயக்கத்தில் தான்
நீயும் நானும்...
போதை போட்டி போடாது
என்னுடைய போதையும்
உன்னுடைய போதையும்
போட்டி போடாது
ஒருவருக்கொருவர்
தோளில் கை போடும்
பேதங்கள் எல்லாம் மிதமாகும்
மீதமில்லாமல் போகும்
சமத்துவமே போதை
தள்ளாடி நடந்தாலும்
நம்மை ஒன்றாக்கும் பாதை...
தாய்ப்பால் போதை
தாய்மொழி போதை
நட்பு போதை
காதல் போதை
இயற்கை போதை
ஆகாயம் போதை
மௌனம் போதை
தியானம் போதை
விலையில்லாததே போதை
சமத்துவமே போதை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக