புல்லிற்கு வயது தெரியாது
தென்னைக்கு வயது தெரியாது
பூக்களுக்கு வயது தெரியாது
வந்து அமர்ந்த
பட்டாம்பூச்சிக்கு வயது தெரியாது
தட்டான் பூச்சிக்கு வயது தெரியாது
பார்த்து இருந்த
எனக்கும் என் வயது தெரியாது...
இயற்கை மாய விந்தைகளில்
இதுவும் ஒன்று
நிறம் தெரியாத
பெயர் தெரியாத
ஊர் தெரியாத
உறவு தெரியாத
தெரியாத தெரியாத...
விந்தைகள் பலவுண்டு
இயற்கை எய்தும் நாளில்
விந்தையில் பெரிதுண்டு...