திங்கள், 25 நவம்பர், 2024


தீயைப் 

பூவென்று முத்தமிடும் பட்டாம்பூச்சிகள்

குழந்தைகள்


விரலில் தொட்டு

வந்த கொப்புளம் காண்பித்தேன்

அதையும் பூவென்றுத் தொட்டுப் பார்க்கிறது


தொடர்ந்து சிறகசைக்கிறது

தொட்டுத் தொட்டு

உலகைப் பூந்தோட்டமாகப் பார்க்கிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக