செவ்வாய், 19 நவம்பர், 2024


பலூனைக் கொண்டுசெல்லும் நதிக்கும்

பலூனைக் கொண்டுசெல்லும் காற்றுக்கும்

பலூனைக் கொண்டுசெல்லும் குழந்தைக்கும்

எந்த வித்தியாசமும் இல்லை

எல்லாமும் பலூனைத் தர மறுக்கிறது


நதியாக காற்றாக

குழந்தை மாறுகிறதா... 


நதியும் காற்றும்

குழந்தையாக மாறுகிறதா... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக