நான் நினைத்த மாதிரி நீயில்லை
நீ நினைத்த மாதிரி நானில்லை
யார் நினைக்கும் மாதிரியும் யவருமில்லை
நினைத்தா நீ வந்தாய்
நினைத்தா நாம் சேர்ந்தோம்
நினைத்தா இப்படிப் பிரிந்தோம்
நினைக்காமல் நடக்கும்
நினைக்காமல் துடிக்கும்
நினைக்காததுவே அற்புதம்
நினைக்காத வரம் வேண்டி
நினைக்காத நாள் இல்லை
ஆனாலும்
நினைக்காத பொழுதில்லை நண்பா...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக