கோவிலை நம்பி இருக்கும் புறாக்களுக்கும்
கோவிலை நம்பி இருக்கும் மனிதர்களுக்கும்
ஒரு போலயில்லை நம்பிக்கை
சர்ச்சு புறாக்கள்
மசுதிக்கும் கோவிலுக்கும் போய் வருவதுபோல
மனிதர்கள் போவதில்லை
மனிதர்களுக்கு
ஒவ்வொரு கோவிலிலும்
ஒவ்வொரு கடவுள்
புறாக்களுக்கு
எல்லா கோவிலிலும்
ஒரே கடவுள்
கலக்கக் கூடாத யாவையும் கலந்து
இயற்கையைக் கெடுத்துக் கொண்டு
லட்டுக்கு நீதி கேட்டு அலையும் மனிதர்கள்
ஊழல் செய்து சிறை சென்று
பிணையில் வரும் கயவர்களை
புனிதராக்கும் மனிதர்கள்
கவலை ஏதுமின்றி
கலவரம் ஏதுமின்றி
இயற்கையைக் கொண்டாடும் புறாக்கள்
கோவிலை நம்பி இருக்கும் புறாக்களுக்கும்
கோவிலை நம்பி இருக்கும் மனிதர்களுக்கும்
ஒரு போலயில்லை நம்பிக்கை...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக