புதன், 29 மே, 2024


தகப்பன் முதுகில்
அடிக்கும் கத்தரி வெயிலை
முறைத்துப் பார்க்கிறது
அவன் தூக்கிச் செல்லும் குழந்தை...

பிஞ்சு தான் எனினும்
அதன் நெஞ்சு தைரியத்தால்
மேகத்தில் ஒளிந்து கொள்கிறது
கத்தரி வெயில்...

நிழல் அணைத்தபோது
குழந்தையை அணைத்து முத்தமிட்ட
தகப்பனுக்குத் தெரியும் போல
தன் குழந்தை முறைத்த வெயிலை...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக