ஞாயிறு, 19 மே, 2024


கணம் தோறும் காத்திரு
மணியல்ல
நாளல்ல
வாரமல்ல
வருடமல்ல
கணம் தோறும் காத்திரு...

நிகழும் நிகழ்வுகளைப் பார்த்திரு
நீயாக நிகழ்தாமல்
தானாக நிகழும்
கணம் தோறும் காத்திரு...

பார்த்ததும் வருமே பரவசம்
பார்த்துக்கொண்டே இரு புதிதாகவே
ஆழம் இருக்கும்வரை
புதிதும் இருக்கும்
புதிதினும் புதிது கேள்
ஆழம் அழைத்துக்கொண்டேச் செல்லும்
அதுவே பேரண்டப் பேருண்மை
கணம் தோறும் காத்திரு...

புன்னகையைப் பூக்க விடு
பறித்திடாமல் பார்த்துக்கொண்டே இரு
மலர்ந்து மலர்ந்து நட்சத்திரமாகும்
எண்ணிலாமல் பூக்கும்
முடிவிலாத முதற் கடவுளை
கண்கள் மூடிப் பார்
யாவும் ஒன்றென ஜொலிக்கும்
தூங்கும் குழந்தையாகச் சிரிக்கும்
உள்ளும் வெளியும் புன்னகைதான்
கணம் தோறும் காத்திரு...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக