அவர் தனிமையில் இருப்பதை
பார்க்கலாம்
அவரை ஆயிரம் பறவைகள் சூழ
பார்க்கலாம்
அவர் சிரிப்பதைப்
பார்க்கலாம்
அவர் கோபம் கொள்வதைப்
பார்க்கலாம்
அவர் உயிரோடு இருப்பதைப்
பார்க்கலாம்
அவரை மரணப்படுக்கையில்
பார்க்கலாம்
அவரும் எவரும்
அப்படி இல்லை
என்பதையும்
போகப்போகப் பார்க்கலாம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக