விடியல் வரப் போகிறது
இரவை ரொம்பப் பிடிக்கிறது
அந்தி சாயப் போகிறது
பகலை ரொம்பப் பிடிக்கிறது
நெருப்பு அணையப் போகிறது
வெம்மை ரொம்பப் பிடிக்கிறது
மழை நிற்கப் போகிறது
குளிரை ரொம்பப் பிடிக்கிறது
உடல் கெட்டுப் போகிறது
உயிரை ரொம்பப் பிடிக்கிறது
இருக்கும் வரை நினைப்பதில்லை
இறக்கும் வரை புரிவதில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக