வெந்து தணியக் காடு
உன் ஓரப் பார்வைக்குக் காத்திருக்கும்
பசுமை தழைக்கும்
பூத்துக் குலுங்கும்
நினைவுகள் தாங்க முடியவில்லை
வெந்து தணியக் காடு
உன் ஓரப் பார்வைக்குக் காத்திருக்கும்
குயில்களின் இசை
மயில்களின் நடனம்
உனை நினைக்காத நாழிகை இல்லை
வெந்து தணியக் காடு
உன் ஓரப் பார்வைக்குக் காத்திருக்கும்
வேட்டையாடும் புலி
சிதறிப் பாயும் குருதி
உனை கட்டியணைக்கத் துடிக்கும் மனவுறுதி
வெந்து தணியக் காடு
உன் ஓரப் பார்வைக்குக் காத்திருக்கும்
காட்டாற்று வெள்ளம்
கயல் கூட்டம் துள்ளும்
இதயத்தைத் துளை போடும்
சிறு பச்சைப் புல்லும்
வெந்து தணியக் காடு
உன் ஓரப் பார்வைக்குக் காத்திருக்கும்
ஆல் அமர்ந்த வண்டு
மொத்த மரத்தையும் உண்டு
போல் பல நின் கனவுகள் கண்டு
வெந்து தணியக் காடு
உன் ஓரப் பார்வைக்குக் காத்திருக்கும்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக