வெள்ளி, 8 அக்டோபர், 2021

 


ஒளிந்து பார்ப்பதை
உள்ளே வரைகிறேன்
உதிரம் தொட்டு

நேரில் பார்ப்பதை
வெளியே வரைகிறேன்
சாயம் தொட்டு

ஒளிந்து பார்க்கும் என்னையும்
ஓவியத்தில் வைத்துவிட்டேன்
நீ திரும்பிப் பார்க்கவேண்டும்
உன்னைத் தூரிகையால் திருப்பிவிட்டேன்
உதிரம் தொட்டு வரைவதையும்
உனக்குச் சொல்லிவிட்டேன்

அந்த நிர்வாண மாதிரி
எங்கோ பார்க்கிறாள்
ஏதும் தெரியாதமாதிரி...

உதிரம் தொட்டு
அவள் உள்வரையும்
அந்த ஓவியம்தான் என்ன?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக