செவ்வாய், 11 மார்ச், 2025


நடை பழகுதல்

மிதிவண்டி பழகுதல்

எல்லாமும் எல்லாமும்

பழகும்போதே

துவங்கும்போதே

அனுபவித்து மகிழ்

கொண்டாடித் தீர்

அல்லாது 

அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் எனில்

இப்புறம் போல் அது இருக்காது

துவங்கும்போதே

துள்ளி ஆடினால்

நிச்சயம் மூச்சு முட்டும்

இருக்கட்டும்

முட்டி மோதும் மூர்க்கம்

முடிவுவரை வேண்டும்

அதனால் அதனால்

துள்ளி ஆடு

உயிர் மழையின்

கடைசித் துளி வரை... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக