வெள்ளி, 12 ஏப்ரல், 2024


நீரையும்
மண்ணையும்
காற்றையும்
விட்டுவிட்டு
ராமர் கோயிலை
புதிதாகக் கட்டும்
சிந்தனையாளர்கள்

ஏரிகளை
ஆறுகளை
அணைகளை
விட்டுவிட்டு
பட்டேல் சிலையை
வானளாவக் கட்டும்
தேசபக்தர்கள்

வறுமையை
பஞ்சத்தை
பட்டினியை
விட்டுவிட்டு
மதச் சிறுமையை
மனதில் ஏற்றும்
மானுட அறிஞர்கள்

சிறு
குறு
தெரு
வணிகர்களை
விட்டுவிட்டு
அம்பானி, அதானியை
வளர்த்தெடுக்கும்
அறநெறிப் பண்பாளர்கள்

இலைமறைக் காயாக
எதிர்மறையை நேர்மறையாக
மாற்றிச் சொல்வதெல்லாம்
மாறிவரும் பண்பை
மக்கள் மனம் சேர்க்க...

எதிர்த்துப் பேச வேண்டாம்
எதிர்த்துப் பார்த்தாலே
பாவிகள் எரித்து விடுவார்கள்
கோத்ரா
டெல்லியில் விவசாயிகளின்
யாத்ரா
எதையும் மறந்துவிடாதீர்கள்

பத்துத் தலை வேண்டாம்
ஒற்றை விரல் போதும்
துணிந்து
ஒரு கை பாருங்கள்...

அரை ஆடை
இல்லையென்றாலும்
ஆடம்பர ஆடை
இல்லாத இந்த
காந்தியின் கையுடன்
கை சேருங்கள்...

இந்தியா
இந்தியாவாகவே இருக்கட்டும்
இந்தியாக,
இந்துவாக
சுருங்கிடாமல்
இந்தியா
இந்தியாவாகவே இருக்கட்டும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக