வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022


உடற்கூறு மருத்துவர்தான்
உயிரைப் பற்றி
அவருக்கும் ஒன்றும் தெரியாது...

உயிர் போகும் வலியே இல்லை
வலி போனால் தான்
உயிர் போகும்...

சர்க்கரை
ஏறும் இறங்கும்
படகு கவிழும் வரை பயணிக்கும்...

பயம் எதற்கு
வெற்றுப் படகுக்கும்
கவிழும் நாள் உண்டு

மிதக்கும் வரை மித
கவிழும் போது கவிழ்
அடுத்தடுத்து நிகழ்வுண்டு

ஆற்றோடு செல்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக