திங்கள், 15 ஆகஸ்ட், 2022


கான்வென்ட் பள்ளிகளில்
அழகழகாய் வளர்கிறது
குரோட்டன்ஸ்...

அழிந்து வருகிறது
அரசு பள்ளிகளும் அதில்
ஆல அரச மரங்களும்...

காடு கம்யூன்
நாடு வியாபாரம்
நாடாளும் வியாபாரிகள்

வேலி போட்டால்
காடு வளராது

விதையுள் இருக்கிறது காடு
காட்டில் இருக்கிறது சுதந்திரம்
வந்தே மாதரம்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக