புதன், 3 ஆகஸ்ட், 2022


சிறகில்லாமல் பறந்து வந்த மீனுக்கு
உன் பார்வையில் பட்டதும்
சிறகு முளைத்தது

சிறகு அசைக்கும்
உன் பார்வை பரவசத்தில்
பறப்பதில்லை அது எப்போதும் உன் வசத்தில்

நீரும் மறந்தது
வானைத் துறந்தது
உன் பார்வையிலேயே தவம் கிடக்குது

என்னை மறந்து
என்னைத் துறந்து
உன் பார்வைக்காகவே தவம் கிடக்கிறேன்

தூண்டில் இல்லாமல்
நீ பிடிக்கிறாய்
இருந்தும் ஏனோ வலி கொடுக்கிறாய்

அருகில் நின்று துடிக்கும் மீன்
எதிரில் நின்று துடிக்கும் நான்
எளிதில் பார்வை பார்க்காமல் நீ

விழி பாராயோ
வழி தாராயோ
கண்ணம்மா

விழி என்று சொல்வது
வழி மறந்து நிற்பது
அந்த மீனும் எதிரில் நானும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக