ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

 

ஒளியின் திசையில்
நிழல் இருக்கும்
நிஜத்தை நிழல் பிரிந்திருக்கும்

இருளுக்குத் திசை இல்லை
நிஜமும் நிழலும் ஒளிந்திருக்கும்
பின்னிப்பிணைந்துக் கலந்திருக்கும்

திக்கற்ற எனக்குள்ளும்
ஏதேதோ பயந்து இருக்கும்
எல்லாமும் தானே நான்

ஒளி கற்பனை
இருள் உண்மை
ஏற்றுக்கொள்வது கடினம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக