வியாழன், 12 ஆகஸ்ட், 2021

 


ஞானம் பெரிதல்ல
அம்மாவிற்கு
நான் தான்...

உலகக் கடவுளாக
இருப்பதில்லை அம்மாக்கள்
நமக்கு மட்டும் தான்...

ஊருக்காக வானம்
எனக்காக அம்மா
எப்பொழுதும் விழித்திருக்கும்...

எனக்கு நோய்நொடி என்றால்
அம்மாவிற்கு
ஒரு நொடி கூட இல்லை...

கடவுள்
கடுமையாகச் சிந்தித்து தான்
உயிரை
அவளுக்குள் வைத்தான்

சிக்ஸ் பேக்
அழகு
உன் ஒன் பேக்
பேரழகு...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக