நீ கண் மூடி பார்க்கும்போது
நானே தெரிய வேண்டும் என்று
நானும் கண்மூடி உன்னுள் நுழைந்தேன்
நான் உன்னைப் பார்க்கிறேன்
நீ கண் மூடியே இருக்கிறாய்
கண்மூடி கண்மூடி உன்னுள் நுழைகிறேன்
நீ கண் மூடியே இருக்கிறாய்...
கண் திறந்து பார்த்துவிடு
நான் தொலைந்துவிடப் போகிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக