மனம்
இடம் மாறினால்
நிறம் மாறும்
நீர் போல...
போகும் இடம்
பாதையாகும்
நீர் போல...
சுட்டெரித்தால்
ஆவி ஆகும்
நீர் போல...
குளிர்ந்து விட்டால்
உறைந்து விடும்
நீர் போல...
கண்டதையும் சேர்ந்துவிட்டால்
சாக்கடை தான்
நீர் போல...
கலங்கினாலும்
தெளிந்து விடும்
நீர் போல...
உடல் பாத்திரத்தில்
ஊற்றி வைத்த
நீர் போல...
உடல் போனபின்னும்
உலகில் நிற்கும்
நீர் போல...
இறைக்கடல் சேரும்வரை
அலைந்து திரியும்
நீர் போல...
உள்ளதை மறைக்காமல்
தெளிவான நீர் போல...
உலகெலாம் சுதந்திரமாய்
சுற்றித் திரி
நீர் போல...
மனமே!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக