வியாழன், 15 ஆகஸ்ட், 2024


குழந்தாய்
மேலும் கீழும்
உன்னைத் தூக்கி விளையாடும்
இந்தத் தாத்தாவின் முதுகு
வெறும் தட்டை முதுகு கிடையாது
தட்டான் முதுகு
அதன் கண்ணாடிச் சிறகுகள்
கற்பனை வானத்தில்
மேலும் கீழும்
உன்னைத் தூக்கிப் பறப்பதை
நீ மட்டுமே அறிவாய்...

உனக்குத் தெரியுமா?
ஒரு பெருங் கவிஞனை
நீ அசைத்து அசைத்து
கவிதை எழுதுகிறாய்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக