புதன், 20 மார்ச், 2024


சிறிய அம்பிகையே
சிறு புன்னகைதான் என்றாலும்
உன் சிங்கார விழிகள்
அம்பாகப் பாயுதடி - அந்த
வெங்கலச் சிரிப்பை - உன்
செங் கன்னத்தில் புதைத்து
என் உள்ளத்தில் வீசுகிறாய்
சகியே மௌனத்தைப் பாய்ச்சுகிறாய்
மெல்லென வளைந்த
வில்லென உதடுகள்
மென்மேலும் அம்பெறியும்
இதயத்தில் துளை வரையும்
ஆளைக் கொல்லும் அழகே
இனியும் இறங்க முடியவில்லை
உன் கழுத்தே
என் உயிரின் எல்லை...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக