புல்வெளிக்கு
காதுகள் முளைத்ததாய்
கண்கள் பூத்ததாய்
நம்பி விடுகிறேன்
நான்
உற்றுப் பார்ப்பது பிடிக்காமல்
உருமாறி ஓடியது
முயலாக...
இதற்கு முன்பாக
மைனாவாகப் பறந்தது
நேற்று
தேவதையாக நடந்தது
முன்தினம்
வெட்டுக்கிளியாய் விட்டுப்போனது
எல்லாமும் எல்லாமும்
புல்வெளிதான்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக