சனி, 30 மார்ச், 2024

டேனியல் பாலாஜி


ரசிகர்களின் மனதில்
வேட்டையாடி விளையாடியவன்
கதாநாயகர்களை விஞ்சிய
பொல்லாதவன்
வில்லாதி வில்லன்
காட்சிகளைக் கவரும் கள்வன்
வட சென்னையில் மட்டுமல்ல
தமிழ்நாட்டுக்கே இதயத்தின் தம்பி
சினிமாவில்
கூடி நடித்தவன்
நிஜ வாழ்வில்
தனித்து வாழ்ந்தவன்
மரணத்தை உள்வாங்கி
காலத்தில் கலந்துவிட்டான்
நல்லத் திரைக் கலைஞன்
டேனியல் பாலாஜி
அவர் ஆன்மா சாந்தி அடைய
இயற்கையை வேண்டுவோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக