வெள்ளி, 15 மார்ச், 2024


நேற்றைப் போலவே
இன்றும் நாளையும்
நேற்றைப் போலவே
இரவும் பகலும்
நேற்றைப் போலவே
வானும் கடலும்
நேற்றைப் போலவே
நாயும் பூனையும்
நேற்றைப் போலவே
பறவையும் பட்டாம்பூச்சியும்
நேற்றைப் போலவே
முத்தமும் யுத்தமும்
நேற்றைப் போலவே
பிறப்பும் இறப்பும்
நேற்றைப் போலவே
யாதும் யாவும்
இருக்க...
நேற்றைப் போலவே
நீயும் நானும்
இருந்துவிட்டு போனாலென்ன... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக