கசப்பை சேமியுங்கள்
இனிப்பு கிடைக்கும்
எத்தனை எத்தனை
தங்க வடிகட்டிப் பதினெட்டுகள்
அத்தனையும் அத்தனையும்
நரகத்தின் படிக்கட்டுகள்
அல்லது நீ சொல்வதைப் போல
சொர்க்கத்தின் படிக்கட்டுகள்
எதுவாயினும்
அதற்குள் எதற்கு
அங்கே போகப் பார்க்கிறாய்...
உன்னை நீ வெறுத்தால்
உன்னை நேசிப்பார்களிடம்
உன்னைக் கொடுத்துவிடு...
உன்னை நீ மறந்துவிட
இப்படியும்
ஒரு வழி இருக்கிறது
புகைத்துப் புகைத்து
நீ உன்னைத்தான் பகைக்கிறாய்
கசப்பை சேமியுங்கள்
புகைத்துக் கரியாக்காமல்
கசப்பை சேமியுங்கள்
இனிப்பு கிடைக்கும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக