ஞாயிறு, 17 மார்ச், 2024


எல்லோருக்கும் நன்மை செய்தால் கடவுள்
எனக்கு மட்டும் நன்மை செய்தால் பிசாசு
என்றெண்ணியவாறே
ஊதிய போதைப் புகை கேட்டது
நீ பிறர்க்கு செய்யும் தீமை?
குட்டிப் பிசாசு என்றேன்
தனக்குத் தான் செய்யும் தீமை?
பார்க்காத பேய்,
பலபேர் என்னில் பார்த்ததாய்ச்
சொல்லக் கேட்டிருக்கிறேன்
இதுவரை கண்டிலேன்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக