நமக்குத் தெரிந்த மொழியில் மட்டுமே
நம்முடன் உரையாடுவதில்லை
கடவுள்...
செவிகளைத் தளர விட்டால்
எல்லாமே கேட்கிறது
எல்லாமே புரிகிறது...
காதைத் திருகித்
தந்தைச் சொல்லித்
-தந்ததும் புரிகிறது...
கண்ணீர் வழிகிறது
அந்த மெல்லிய ஒலி
கடவுள் பேசியது...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக