வியாழன், 15 ஜூன், 2023


இதயத் துடிப்பு
இசையாய் மாறும் தருணம்
காதல்

இடி இறங்கி
மலரும் மொட்டு
காதல்

புழுதிப் புயலில்
புல்லின் நடனம்
காதல்

கண்களின் கரையில்
உப்பளம் பூக்கும்
காதல்

இமைகள் திறந்து
எனக்குள் நுழையும் நீதான்
காதல்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக