கண் முன் தெரியும் அனைத்தையும்
வியந்து பார்க்கும் குழந்தை நீ
யானையை பார்க்கும் எங்களைப் போல்
எறும்பை துரும்பை காண்பவன் நீ
வடிவம் தாண்டி பார்ப்பவன் நீ
வடிவில் அமரா வானம் நீ
ஒற்றைச் சொல்லில் நண்பன் நீ
நீடூழி வாழ்க நண்பா
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக