எந்தப் புள்ளியில் தொடங்கும்
எந்தப் புள்ளியில் முடியும்
உயிர் வரையும் ஓவியம்
எது மாதிரியும் இல்லாமல்
இது மாதிரியும் ஏதும் வாராமல்
புது மாதிரி ஓவியம்
விதை ஒன்று முளைக்கும்
கொடி சுவர் பற்றி வளரும்
மலரும் உதிரும் ஓவியம்
பட்டாம்பூச்சி பறந்த பாதை ஓவியம்
காதல் போதையில் கடந்த காலம் ஓவியம்
புரிந்தும் புரியாத ஞானம் ஓவியம்
குழந்தை வரையும் ஓவியம்
குழந்தை விரலை வரையும் ஓவியம்
கடவுள் வரையும் ஓவியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக